ஜம்முவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் ஏழுமலையான்கோவில்குடமுழுக்கு விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான்கோவில் உலக பிரசித்தி பெற்றது. உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். திருப்பதி திருமலையில் மக்கள் கூட்டத்தால் நெரிசல், தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பல்வேறு ஊர்களிலும்இருந்து வந்து திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க முடியாத வயதான மற்றும்மாற்றுத்திறனாளிபக்தர்களின்வசதிக்காக பல்வேறு இடங்களிலும் ஏழுமலையானுக்கு கோயில்கள் அமைக்கும் பணியை திருப்பதி தேவஸ்தான அமைப்பு தொடங்கி வருகிறது.
அதன்படி கன்னியாகுமரி, சென்னை, டெல்லி, புவனேஷ்வர் மற்றும் ஹைதராபாத் ஆகிய 5 இடங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில் 6வதுகோவில் ஜம்முவில் கட்டப்பட்டு வந்தது.தற்போது கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் வரும் ஜூன் மாதம்8ம்தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தான அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவைத்தொடர்ந்து அன்றையதினமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.