Advertisment

உயரும் திருப்பதி லட்டு விலை... பக்தர்கள் அதிர்ச்சி!

திருப்பதி என்றால் அனைவருக்கும் உடனடியாக ஞாபகம் வருவது ஏழுமலையான். அதை விட அதிகம் நினைவில் வருவது அங்கு கொடுக்கப்படும் லட்டுக்கள். அதில்தான் தற்போது சிக்கல் வந்துள்ளது. திருப்பதி கோயிலுக்கு நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. மேலும் பக்தர்கள் 70 ரூபாய் கொடுத்து நான்கு லட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

Advertisment

இதனால் ஆண்டுக்கு 200 கோடி நஷ்டம் ஏற்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி முதல் இந்த இழப்பை ஈடுசெய்ய வழக்கபோல ஒரு லட்டை இலவசமாகவும், அதற்கு மேல் வாங்கும் லட்டுக்களை தலா ஒன்று 50 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 70 ரூபாய் கொடுத்து நான்கு லட்டுகளை பெற்றவர்கல் இனி 200 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Tirupati
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe