Skip to main content

யெஸ் வங்கியிலிருந்து ரூ.1300 கோடியை முன்னரே எடுத்தது எப்படி ..? திருப்பதி தேவஸ்தான தலைவர் பதில்...

Published on 09/03/2020 | Edited on 09/03/2020

பிரபல தனியார் வங்கியான 'யெஸ் வங்கி' (YES BANK) வாராக் கடன் அதிகரிப்பால் நிதிச் சுமையில் சிக்கித் தவித்து வந்த நிலையில், அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. மேலும் அடுத்த முப்பது நாட்களுக்கு அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து 50,000 மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், பொதுமக்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

tirupathi devasthanam about yes bank collapse

 

 

இந்நிலையில் கடந்த மாதம் திருப்பதி தேவஸ்தானம், யெஸ் வங்கியில் வைத்திருந்த ரூ.1300 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகை மற்றும் நகை ஆகியவற்றை எடுத்தது. வங்கி சேவைகள் முடங்கும் முன்பு திருப்பதி தேவஸ்தானம் சரியாக எப்படிப் பணத்தை எடுத்தது என்பது குறித்து, தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி கூறும்போது, "வங்கியின் நிதிநிலை மோசமாக இருந்ததை நான் ஏற்கெனவே உணர்ந்திருந்தேன். வங்கியின் நிதி நிலையை எனக்கு முன்கூட்டியே புரியவைத்து பணத்தைப் பாதுகாக்க உதவிய இறைவனுக்குத்தான் அனைத்து நன்றியும் போய்ச் சேரும்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்பத்தோடு வி.ஐ.பி. தரிசனம் வேண்டுமா? - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Tirupati Devasthanam Announcement VIP with family Want a vision

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பாஜக, இந்துத்துவா அமைப்புகள் போன்றவை அமைச்சர் உதயநிதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவரது பேச்சுக்கு ஆதரவான கருத்துகளும் குவிந்து வருகின்றன. 

 

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகத் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து, ராம நாமத்தை போல் கோவிந்த நாமத்தை ஒரு கோடி எழுதி அனுப்பும் இளைஞர்களுக்கு வி.ஐ.பி தரிசனம் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

 

திருமலை - திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான புதிய அறங்காவலர் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர ரெட்டி கூறியதாவது, “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிராக விமர்சனம் செய்ததற்காக திருமலை - திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான குழுவினர் சார்பில் எங்களது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

 

சனாதனம் என்பது ஒரு மதம் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இந்த விஷயம் தெரியாமல் சனாதன தர்மம் குறித்து விமர்சனம் செய்வதால் சமூகத்தில் கலவரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சனாதன தர்மத்தை இந்து மக்கள் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். இது குறித்து நாம் மக்களுக்கு பிரச்சாரங்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இளைஞர்களிடையே இந்து சனாதன தர்மத்தை பரப்பும் நிகழ்ச்சியை ஏழுமலையான் கோவிலில் இருந்து தொடங்க உள்ளோம். அதன் ஒரு பகுதியாக, ராம நாம பாணியில் கோவிந்த நாமத்தை ஒரு கோடி முறை எழுதும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

 

மேலும், 10 லட்சத்து 1,116 முறை கோவிந்த நாமத்தை எழுதி வருவோருக்கு ஏழுமலையான் தரிசன பாக்கியம் கிடைக்கும். மேலும், சனாதன தர்மத்தை ஊக்கப்படுத்தவும், இளமைப் பருவத்திலேயே பக்தியை அதிகரிக்கவும், எல்.கே.ஜி முதல் பி.ஜி வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு சனாதன தர்மத்தையும், மனிதாபிமானத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பகவத் கீதையை 20 பக்கங்களில் சுருக்கிட்டு புத்தக வடிவில் அச்சிடப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும். அதற்காக மொத்தம் 1 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார். 

 

 

Next Story

“கோவிந்தா... கோவிந்தா...” - திருப்பதியில் ஷாருக்கான், நயன்தாரா

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

Actor Shah Rukh Khan, his daughter Suhana Khan and actress Nayanthara offered prayers at Sri Venkatachalapathi Swamy in Tirupati..

 

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ‘ஜவான்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தினை தமிழின் முன்னணி இயக்குநரான அட்லீ இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படம் வரும் 7-ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது

 

Actor Shah Rukh Khan, his daughter Suhana Khan and actress Nayanthara offered prayers at Sri Venkatachalapathi Swamy in Tirupati..

 

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தன் மகளுடனும், நடிகை நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். எப்போதும் கோட் சூட் உடன் இருக்கும் ஷாருக்கான் வெள்ளை உடையில் பட்டு அங்கவஸ்திரம் போட்டிருந்தார். திருப்பதியில் சாமி கும்பிடச் சென்ற அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது