பொருளென்னும் பொய்யா விளக்கம்... பொருளாதார ஆய்வறிக்கையில் 'திருக்குறள்'!

tirukkural mention about economy union minister nirmala sitharaman

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று (29/01/2021) காலைதொடங்கியது. பின்பு மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையை பிப்ரவரி மாதம் 1- ஆம் தேதி(திங்கள்கிழமை) காலை 11.00 மணிக்கு ஒத்திவைத்தார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.

இந்த நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் 11% வளர்ச்சியடையும் எனஆய்வறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார ஆய்வறிக்கையில் 'பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று' என்ற குறள் இடம் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, மாநிலங்களவையைத் துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவையின் சபாநாயகருமான வெங்கைய நாயுடு பிப்ரவரி 1- ஆம் தேதி வரை ஒத்திவைத்தார்.

2021- 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1- ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nirmala Sitharaman Parliament Union Minister
இதையும் படியுங்கள்
Subscribe