Skip to main content

பொருளென்னும் பொய்யா விளக்கம்... பொருளாதார ஆய்வறிக்கையில் 'திருக்குறள்'!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

tirukkural mention about economy union minister nirmala sitharaman


குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், இன்று (29/01/2021) காலை தொடங்கியது. பின்பு மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமலியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையை பிப்ரவரி மாதம் 1- ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 11.00 மணிக்கு ஒத்திவைத்தார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.

 

இந்த நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் 11% வளர்ச்சியடையும் என ஆய்வறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார ஆய்வறிக்கையில் 'பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று' என்ற குறள் இடம் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, மாநிலங்களவையைத் துணைக் குடியரசுத் தலைவரும், மாநிலங்களவையின் சபாநாயகருமான வெங்கைய நாயுடு பிப்ரவரி 1- ஆம் தேதி வரை ஒத்திவைத்தார்.

 

2021- 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1- ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

21 முறை ‘ஓம் ஸ்ரீ ராம்’ என எழுதி பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
The Union Minister took charge by writing 'Om Shri Ram' 21 times!

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். 

இந்தத் தேர்தலில் முக்கிய திருப்பமாக அமைந்த 16 எம்.பி.க்கள் கொண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 4 எம்.பிக்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. அதன்படி, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ராம் மோகன் நாயுடுவுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 

இந்த நிலையில், இன்று (13-06-24) எம்.பி ராம் மோகன் நாயுடு மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்பதற்கு முன்னதாக 21 முறை ‘ஓம் ஸ்ரீ ராம்’ என்று எழுதி பொறுப்பேற்றார் என்பது கவனிக்கத்தக்கது. 

Next Story

மத்திய இணை அமைச்சர் இலாகா ஒதுக்கீட்டால் சர்ச்சை?

Published on 10/06/2024 | Edited on 11/06/2024
Controversy due to Union Minister of State portfolio allocation

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதனையடுத்து மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சி.ஆர்.பாட்டீல் - ஜல் சக்தி (நீர்வளம்) கேபினட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வி.சோமண்ணா - ஜல்சக்தி (நீர்வளம்) இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சோமநாத்துக்கு மத்திய இணை அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதி நீர் பிரச்சனை நீடித்து வரும் நிலையில் சோமநாத்துக்கு நீர்வளத் துறை ஒதுக்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேகதாது விவகாரத்திலும் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்கட்சியான பாஜகவும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவைச் சேர்ந்தவருக்கு நீர்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள்,  அரசியல் விமர்சகர்கள், தமிழக விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.