Skip to main content

”திப்பு சுல்தான் வீரர் அல்ல”- பாஜக மாவட்ட செயலாளர்

Published on 10/11/2018 | Edited on 10/11/2018
tippu

 

கர்நாடகாவில்  அரசு  சார்பில் திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு நடத்தும் இந்த விழாவிற்கு முதலமைச்சர் குமாரசாமியே செல்ல போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இந்த ஜெயந்தியை எதிர்த்து பாஜக போராட்டம் நடத்தியது.  அதேபோல இன்று மடிகேரி என்னும் பகுதியில் பல்வேறு அமைப்புள் போராட்டம் நடத்தி வருகின்றன. சிலர் அந்த பகுதியில் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் அங்கு பல போலிஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். 
 

இதுகுறித்து பாஜக மாவட்ட செயலாளர் சஜ்ஜல் கிருஷ்ணா கூறுகையில், திப்பு ஜெயந்திக்காக பொது மக்களின் பணத்தை வீணடிக்கிறது. அவர் ஒன்றும் வீரர் அல்ல, பல ஹிந்துக்களை கொன்றதுடன், ஹிந்து கோவில்களை சேதப்படுத்தியுள்ளார். இது போன்றவரை எதற்காக புகழ வேண்டும். இது ஓட்டுவங்கி அரசியல் மட்டுமே. குடகு பகுதியில் கூட இதை எதிர்க்கிறார்கள் என்றார். 
 

இறுதியில், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பினரை போலிஸார் கைது செய்துள்ளனர்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

திப்பு ஜெயந்தியை அரசு கொண்டாடுவதை எதிர்த்து பாஜக போராட்டம்....

Published on 09/11/2018 | Edited on 09/11/2018
karnataka protest


கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாளை திப்பு சுல்தானின் பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தியை இந்த அரசு கொண்டாட இருக்கிறது. ஆனால், எதிர்கட்சியான பாஜகவோ இதை கண்டித்து, எதிர்த்து வருகிறது. கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, ”திப்பு ஜெயந்தியை இந்த அரசு கொண்டாடுவது தவறு. இவர்கள் இசுலாமியர்களிடம் ஓட்டு வாங்கவே இதை பெரும் அளவில் கொண்டாட உள்ளதாக தெரிவிக்கின்றனர். பாஜக இதை முற்றிலுமாக எதிர்க்கிறோம்” என்றார். 
 

இந்நிலையில், நாளை நடக்க உள்ள திப்பு ஜெயந்தியை எதிர்த்து இன்று பெங்களூருவில் பாஜக தொண்டர்கள், தலைவர்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.