கர்நாடகாவில் மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாளை திப்பு சுல்தானின் பிறந்தநாளை முன்னிட்டு கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தியை இந்த அரசு கொண்டாட இருக்கிறது. ஆனால், எதிர்கட்சியான பாஜகவோ இதை கண்டித்து, எதிர்த்து வருகிறது. கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, ”திப்பு ஜெயந்தியை இந்த அரசு கொண்டாடுவது தவறு. இவர்கள் இசுலாமியர்களிடம் ஓட்டு வாங்கவே இதை பெரும் அளவில் கொண்டாட உள்ளதாக தெரிவிக்கின்றனர். பாஜக இதை முற்றிலுமாக எதிர்க்கிறோம்” என்றார்.
இந்நிலையில், நாளை நடக்க உள்ள திப்பு ஜெயந்தியை எதிர்த்து இன்று பெங்களூருவில் பாஜக தொண்டர்கள், தலைவர்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.