Advertisment

உத்தரப்பிரதேசத்தில் அரியணை யாருக்கு?: டைம்ஸ் நவ் - போல்ஸ்ட்ராட் கருத்துக்கணிப்பு வெளியீடு!

UTTARPRADESH

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. 2024ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், உத்தரப்பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்தச் சூழலில், சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டஏபிபி - சி-வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள், பாஜக 241 முதல் 249 இடங்களைப்பிடித்து ஆட்சியைக் கைப்பற்றும் எனவும், சமாஜ்வாடி 130 முதல் 138 இடங்களைப் பெறும் எனவும், பகுஜன் சமாஜ் கட்சி15 முதல் 19 இடங்களைப் பிடிக்கும் எனவும்தெரிவித்தன.

Advertisment

இந்தநிலையில், தற்போதுடைம்ஸ் நவ் - போல்ஸ்ட்ராட் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, பாஜக 239 - 245 இடங்களைப் பிடித்து ஆட்சியைத் தக்க வைக்கவுள்ளது. சமாஜ்வாடி 119 - 125 இடங்களைக் கைப்பற்றவுள்ளது. அதேபோல்பகுஜன் சமாஜ் கட்சி 28 - 32 இடங்களில் வெல்லும் எனவும்டைம்ஸ் நவ் - போல்ஸ்ட்ராட் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Assembly election opinion poll uttarpradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe