subramanian swamy

இந்திய - சீன எல்லையில்,கல்வான்பள்ளத்தாக்கு பகுதியில்கடந்த வருடம் இரு நாடுகளுக்குமிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள்வீர மரணமடைந்தனர். சீனா தரப்பில் 45 பேர் உயிரிழந்ததாகக்கூறப்பட்ட நிலையில், சீனஇராணுவ அதிகாரி மற்றும் வீரர்கள்உட்படஐந்து பேர் பலியானதாக சீன இராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகைசமீபத்தில் செய்தி வெளியிட்டது.

Advertisment

இந்தியா - சீனாஇடையேயான மோதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்தன. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து இரு நாடுகளும், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையில் இறங்கின. இந்தப் பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவினைத்தொடர்ந்து,பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில், இரு நாடுகளும் படைகளை விலக்கிக்கொண்டன. எல்லையின் மற்ற பகுதிகளில் பதற்றத்தைதணிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இதனிடையே பாஜகஎம்.பிசுப்பிரமணியன் சுவாமி, இந்திய பகுதியில் சீனா குடியிருப்பை ஏற்படுத்தியுள்ளதாகக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில்அவர், "சீனாவை, இந்திய மண்ணின் ஆக்கிரமிப்பாளர் என பிரதமர் மோடிபகிரங்கமாகவும் தெளிவாகவும் அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என ட்வீட் செய்துள்ளார். இந்திய மண்ணை சீனா ஆக்கிரமிப்பு செய்யவில்லை என மத்திய அரசு கூறிவரும் நிலையில், பாஜக எம்.பி இவ்வாறுதொடர்ந்து கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.