Advertisment

ஊழல்வாதிகளை பாதுகாக்கும் மோடியை வீட்டுக்கு அனுப்ப நேரம் நெருங்கிவிட்டது - முதல்வர் நாராயணசாமி பேச்சு!

சி.பி.ஐ துறையை அரசியல் லாபத்திற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்து, தங்களின் கைப்பாவையாக மாற்றி ஆட்டுவித்துக்கொண்டிருக்கும்மத்திய பா.ஜ.க அரசை கண்டித்துபுதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

pro

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால் நிலையம் முன் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், மாநிலத்தலைவர் நமச்சிவாயம், முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisment

போராட்டத்தின் போது பேசிய முதல்வர் நாராயணசாமி, "பா.ஜ.கவின் ஆட்சியால் நாட்டு மக்கள் கடும் அவதியடைகிறார்கள். எதிர்கட்சிகள் ஆளூம் மாநிலங்களை முடக்குவது, கண்காணிப்பது தான் மத்திய பாஜகவின் முக்கிய பணியாக உள்ளது.

protest

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ரபேல் விமான விவகாரத்தின் மூலம் தெரிய வருவது என்னவென்றால் மோடி ஊழலை ஒழிக்கவில்லை, ஊழலை வளர்க்கிறார் என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது.

ஹிட்லரை விட இரு மடங்கு மோசமான ஆட்சியை மோடி நடத்துகிறார்.மோடி ஆட்சிக்கு கடைசி காலம் வந்து விட்டது. ராகுல் பிரதமாக வந்தால் தான் மோடியை வீட்டுக்கு அனுப்ப முடியும். இதனால் ராகுலை பிரதமாக்கும் வரை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் ஓய கூடாது " என்று கேட்டுக்கொண்டார்.

Puducherry congress protest
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe