உத்தரப்பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கழிப்பறைக‌ளில் ‌தமிழக அரசின் சின்னம் பொறித்த டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tiles with tamilnadu government logo spotted in uttarpradesh toilets

Advertisment

Advertisment

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷர் மாவட்டத்தில் திபய் என்ற கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தி‌ன் கீழ் 508 கழிப்பறைகள் கட்டப்பட்டன. ‌இதில்‌ 13 கழிப்பறைகளில் மகாத்மா காந்தி மற்றும் தமிழக அரசின் கோபுரம் சின்னங்கள் கொண்ட டைல்ஸ்கள் ‌‌பதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் உடனடியாக இவற்றை உடைத்து எடுத்தனர். மேலும் அந்த பகுதியி‌ன் வளர்ச்சி அதிகாரியான ச‌ந்தோஷ் குமார் என்பவரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதுடன், விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.

tiles with tamilnadu government logo spotted in uttarpradesh toilets