Advertisment

டிக் டாக் பிரபலத்துக்கு சீட்டு... ஹரியானாவில் நடந்த கூத்து!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சோனாலி போகத். இவர் டிக் டாக் மூலம் பிரபலமடைந்து வட மாநிலத்தில் தனி ரசிகர் கூட்டத்தைப் பெற்றவர். அது மட்டுமில்லாமல் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருபவர். இந்நிலையில் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டப்பேரவை பொது தேர்தல் நடக்கவுள்ளது.

Advertisment

இதற்காக அம்மாநிலத்தின் பிராதன கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலின் இறுதி பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஆதம்பூர் தொகுதியில் இவர் எம்.எல்.ஏ வேட்பாளராக களமிறங்கவுள்ளார். சமூக வலைதளங்களில் இவருக்கு இளைஞர்களின் ஆதரவு அதிகம் இருப்பதால் இவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

tik tok
இதையும் படியுங்கள்
Subscribe