மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட காட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டிவரும் நிலையில், வேட்பாளர் பட்டியல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

Advertisment

tik tok star sonali phogat to contest in haryana election

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 12 பேர் கொண்ட இந்த இரண்டாவது வேட்பாளர் பட்டியலில் மகிளா மோர்சா அமைப்பைசேர்ந்தவரும், டிக் டாக் பிரபலமுமான சோனாலி போகட்டிற்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. ஹரியானா மகிளா மோர்சா அமைப்பின் துணைத் தலைவராக உள்ள சோனாலி போகட், ஆதம்பூர் தொகுதியில் போட்டியிடுகின்றார். வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்ற நிலையில், பலரும் அவரது டிக் டாக் வீடியோக்களை ட்விட்டரில் பதிவிட்டு பாராட்டியும், விமர்சித்தும் வருகின்றனர்.

Advertisment