நிர்பயா குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய், பவன், அக்ஷய் சிங்கிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. டெல்லி திஹார் சிறையில் உள்ள தூக்குமேடையில் இன்று (20/03/2020) காலை 05.30 மணிக்கு நான்கு குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர்.

Advertisment

tihar jail nirbhaya case delhi peoples

தூக்குத் தண்டனையை நிறைவேற்றிய பவன் ஜல்லாட்:

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த பவன் ஜல்லாட் நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தண்டனையை நிறைவேற்றினார்.

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே பவன் ஜல்லாட் டெல்லி திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அதைத் தொடர்ந்து நேற்று (19/03/2020) திஹார் சிறையில் பவன் தூக்குத் தண்டனையை ஒத்திகை செய்து பார்த்தார்.

tihar jail nirbhaya case delhi peoples

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அதன் தொடர்ச்சியாக சிறையில் தனி அறையில் தங்கிய பவன் இன்று (20/03/2020) அதிகாலை 03.30க்கு எழுந்து குளித்து முடித்து தண்டனையை நிறைவேற்றினார். இதையடுத்து பணியாளர் பவனுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் சிறைத்துறை நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிட பவனிடம் எட்டு மணிலா தூக்குக் கயிறுகளைச் சிறைத்துறை அதிகாரிகள் அளித்தனர். எட்டு கயிறுகளில் நான்கை தேர்ந்தெடுத்த பவன், மீதமுள்ள நான்கு கயிறுகளைத் தேவைப்படின் பயன்படுத்த வைத்து கொண்டார்.நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிட பவனுக்கு தலா ரூபாய் 20,000 என ரூபாய் 80,000 ஊதியமாகத் தரப்படுகிறது.

tihar jail nirbhaya case delhi peoples

நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதை அடுத்து திஹார் சிறை வெளியே தேசியக் கொடியை ஏந்தியும், இனிப்பு வழங்கியும் 100- க்கும் மேற்பட்டோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் திஹார் ஜெயில் பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.