Tiffin Box Bomb; Statement of Surrender person  Confession

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கொச்சி - களமச்சேரி பகுதியில் ஜெகோபா வழிபாட்டுக் கூட்டத்தில் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் உட்பட 35 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக களமச்சேரி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisment

மேலும் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் குண்டுவெடிப்பு குறித்து மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கொடக்கரா காவல்நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சரணடைந்த கொச்சியைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் கொடுத்த முதல்கட்டவாக்குமூலத்தில் டிபன் பாக்ஸ் மூலம் மறைத்து வைத்து வெடிகுண்டை கொண்டுவந்து வெடிக்க செய்தது தெரியவந்துள்ளது. மேலும் மார்ட்டின் யெகோவா சாட்சிகள் சபையின் உறுப்பினராகவும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. எதற்காக குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது என்பது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment