Advertisment

பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட தாத்தா... உடலின் மீது அமர்ந்தவாறு செய்வதறியாது திகைத்த சிறுவன்...

three year old boy in kashmir rescued by army

பயங்கரவாதிகளுடனான பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச்சண்டையின்போதுஉயிரிழந்த முதியவர் ஒருவரின் பேரன், தனது தாத்தாவின் உடலின் மீது செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் காண்போரைக் கலங்க வைத்துள்ளது.

Advertisment

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று காலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 60 வயது முதியவர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சண்டையின்போது உடலில் தோட்டாக்கள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அந்த முதியவர் உயிரிழந்தார்.

Advertisment

அப்போது அவருடன் வந்த அவரது மூன்று வயது பேரனும் அருகிலிருந்துள்ளார். என்ன நடக்கிறது என்பது தெரியாமல், தன்னுடைய தாத்தா இறந்தது தெரியாமல் அவர் உடலின் அருகிலேயே நின்றுள்ளான். மேலும், தனது தாத்தாவின் உடல்மீது அமர்ந்து செய்வதறியாது திகைத்துப்போனான்அந்த சிறுவன். இதனையடுத்து, உடனடியாக சிறுவனை அந்த இடத்திலிருந்து பாதுகாப்புப்படை வீரர் நகரச் சொல்லி, அவனைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவிக் காண்போரைக் கலங்க வைத்துள்ளது.

kashmir
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe