பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (07.07.2021) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இன்று மாலை ஆறு மணிக்குப் புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிதாக சிலர் அமைச்சராவார்கள் எனவும், சில அமைச்சர்களின்துறைகள் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சிலர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது கல்வித்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் நிஷாங்க் போக்ரியால், தொழிலாளர் நலத்துறைஅமைச்சராக இருந்த சந்தோஷ் கங்வார் ஆகியோர் தங்கள் பதவியை இராஜினாமாசெய்துள்ளனர்.சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ்வர்தனும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.