விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த தமிழர்களின் விவரங்கள் வெளியீடு...

three tamilians traveled in air india flight crashes in calicut

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 8.15 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்கு உள்ளானது. விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்த இந்தக் கோரவிபத்தில் ஒரு குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தகவல் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 10 குழந்தைகள் உட்பட சுமார் 180 பயணிகளும், விமான ஊழியர்களும் இந்த விமானத்தில் பயணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றுவரும் சூழலில், விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த முகமது ஜிடான் பைசல் பாபு, ஷனிஜா பைசல்பாபு, ஷாலா ஷாஜகான் ஆகியோர் பயணித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Air india Kerala
இதையும் படியுங்கள்
Subscribe