Advertisment

மூன்று மாநில முதல்வர்கள் இன்று பதவியேற்பு

sss

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இன்று பதவி ஏற்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் முதல்வராக இன்று பதவி ஏற்கிறார். ஜெய்ப்பூரில் இன்று காலை 10.மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார். அதன்பின் நண்பகல் ஒரு மணிக்கு மத்தியப்பிரதேச முதல்வராக கமல் நாத் பதவி ஏற்க உள்ளார். இதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மேற்கு வங்கம் சார்பில் தினேஷ் திரிவேதி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, ஆகியோரும் மத்தியப்பிரதேச முதல்வர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.

Advertisment

congress elections
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe