Advertisment

ஓடும் காரில் பாலியல் தொல்லை; கண்டுகொள்ளாத போலீஸ்

Three people were arrested for misbehaving with the girl in the car

சிறுமியைக் கடத்தி ஓடும் காரிலேயே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேசம் மாநிலம் குஷிநகர் பகுதியில் 16 வயதான சிறுமியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3 பேர் காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பின்னர் இது குறித்து சிறுமியின் பெற்றோர் கப்தங்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் போலீசார் முதலில் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தியுள்ளனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மூவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குஷிநகர் மாவட்டக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாகப் பேசிய பாதிக்கப்பட்ட சிறுமி, “நான் மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றபொழுது, ஒருவர் என்னைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அருகிலிருந்த குடிசைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். பின்னர், அவருடன் இருக்கும் இரு நபர்கள் சம்பவ இடத்திற்கு வந்து என்னைக் காரில் கடத்தினர். ஓடும் காரில் வைத்தே பாலியல் ரீதியாக மூவரும் துன்புறுத்தினர். தொடர்ந்து, மயக்க நிலையில் நான் வீட்டின் வெளியே வீசப்பட்டேன். இது தொடர்பாக, கப்தங்கஞ்ச் காவல் நிலையத்தில் புகாரளித்தும் முதலில் ஏற்கவில்லை. மூத்த அதிகாரிகளைச் சந்தித்த பின் தான் எஃப்ஐஆர் பதியப்பட்டது” என்றார். இதையடுத்து போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

police uttrapradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe