/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/22_128.jpg)
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ரைசென் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமி தனது 21 வயதுள்ள ஆண் நண்பர் ஒருவருடன் கோவிலுக்குச் சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு வரும் வழியில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் அருகே உள்ள வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர். இதனை கவனித்த லாரி ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளி 2 பேர், சிறுமி மற்றும் அவரது ஆண் நண்பரை பின் தொடர்ந்து வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
பின்னர் வனப்பகுதிக்குள் வைத்து இருவரையும் சுற்றி வளைத்த மூன்று பேரும் சிறுமியின் ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கினர். அதனைத் தொடர்ந்து சிறுமியை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த சிறுமியும், அவரது ஆண் நண்பரும் தங்களுக்கு நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளிகளில் ஒருவர் என இரண்டு பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் நபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆண் நண்பருடன் கோவிலுக்குச் சென்ற சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)