Skip to main content

சென்னை உட்பட மூன்று நகரங்களில் என்.ஐ.ஏ. அலுவலகம்... உள்துறை அமைச்சகம் திட்டம்...

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

three new nia offices to be opened in india

 

 

சென்னை உட்பட நாட்டின் மூன்று நகரங்களில் புதிதாக என்.ஐ.ஏ அலுவலகம் அமைக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதலை அளித்துள்ளது. 

 

பயங்கரவாத செயல்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய விசாரணை முகமை அமைப்பு தற்போது நாட்டின் ஒன்பது நகரங்களில் அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சியில் என்.ஐ.ஏ. அமைப்பின் கிளை அலுவலகங்களைத் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

இதுதொடர்பாக என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசின் இந்த முடிவு குறிப்பிட்ட மாநிலங்களில் பயங்கரவாத தடுப்பு விசாரணையைத் துரிதப்படுத்த உதவும். பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் என்.ஐ.ஏ. விசாரணைத் திறனை வளர்த்தெடுக்கவும், குற்றங்களின் தடயங்களை விரைவில் சேகரிக்கவும் என்.ஐ.ஏ. அலுவலகம் இந்த மாநிலங்களில் இருப்பது உதவிகரமாக இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுஹாத்தி, மும்பை, ஜம்மு, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, லக்னோ, ராய்பூர், சண்டிகர் ஆகிய இடங்களில் ஏற்கனவே என்.ஐ.ஏ அலுவலகங்கள் செயற்பட்டுவரும் சூழலில், தற்போது சென்னை, இம்பால் மற்றும் ராஞ்சியில் கிளை அலுவலகங்களைத் திறக்க முடிவெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்