Advertisment

பள்ளி சென்ற சிறுமியைக் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

Three men misbehave by kidnapped a school-going girl

உத்திரப்பிரதேசத்தில் ஆட்டோவில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியைக் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்திரப்பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் பள்ளிக்குச் சிறுமி ஒருவர் தானியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மூன்று பேர் சிறுமியை கடத்திச் சென்று மோடி நகரில் உள்ள விடுதியில் வைத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதனை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டுவிடுவதாகக் கூறி சிறுமியை மிரட்டியுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் வீட்டுக்குச்சென்ற சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தைப் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில் மூன்று பேர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் தந்தைக்குத் தெரிந்த சிலரால்தான் சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் என்றும், குற்றவாளிகளைத்தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

kidnapped police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe