Three foreigners arrested for possession of drugs

புதுச்சேரி மாநிலத்தில் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான 32 கிராம் எடைகொண்ட கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் வைத்திருந்த வெளிநாட்டைச் சேர்ந்த பெண் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

குருசுக்குப்பம் கடற்கரை பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் வைத்திருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து, விரைந்துசென்ற காவல்துறையினர், சந்தேகத்தின் பேரில் நைஜீரியாவைச் சேர்ந்த ஜஸ்டீன், டேவிட் மற்றும் பிரான்சிஸ் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

Advertisment

படிப்பதற்கான விசாவில் இந்தியா வந்த அவர்கள் மூவரும், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனைச் செய்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், கோகைனை பறிமுதல் செய்த காவல்துறையினர், பின்னர் மூவரையும் சிறையில் அடைத்தனர்.