மின்கம்பி உரசியதில் மூன்று யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், ஜார்கராம் மாவட்டத்தில் பின்பூர் கிராமத்தில் இருந்து சில யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் இருந்த வயல் பகுதிக்கு வந்தன. அப்போது வயல்வெளியில் ஒட்டியுள்ள மின்கம்பிகளில் யானைகளின் வயிறுகள் உரசியதில் ஒரு ஆண் யானை உள்பட மூன்று யானைகள் அந்த இடத்திலேயே உயிரிழந்தன.
இந்த தகவலை அறிந்த அந்தப் பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். யானைகள் இறந்து கிடப்பதை பார்த்த அவர்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.
மூன்று யானைகள் இறந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.