Advertisment

தத்தளித்து பிரிந்த மூன்று உயிர்கள்; தனியார் விடுதி நீச்சல் குளத்தில் நேர்ந்த சோகம்

Three die after drowning in swimming pool; Police investigation

Advertisment

நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த மூன்று பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநில மங்களூர் ஒட்டியுள்ள புறநகர் பகுதியில் தனியார் ரெஸ்டாரண்டில் விடுமுறையை கழிப்பதற்காக மைசூரை சேர்ந்த மூன்று பெண்கள் சென்றுள்ளனர். அப்பொழுது ரெஸ்டாரண்டில் இருந்த நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக நிகிதா (21), பார்வதி (20), கீர்த்தனா (21) ஆகிய மூவரும் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். நீச்சல் குளத்தின் ஒரு பக்கத்தில் ஆறு அடி ஆழம் இருந்தது. இதனை அறியாமல் குளித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் அவரை மீட்பதற்காக சென்ற மற்ற இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து உல்லாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் விடுதியில் மூன்று பெண்கள் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

karnataka police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe