Advertisment

பிபிசியில் மூன்று நாள் ஐ.டி. சோதனை நிறைவு

Three days of IT on BBC. Test completed

Advertisment

கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செய்தி நிறுவனமான பிபிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. மத்திய அரசு இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்ததோடு யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆவணப்படத்தை வெளியிடத் தடை விதித்தது. இது பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயல் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில்வருமான வரித்துறையினர் பிபிசி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் நேற்று முன்தினம்(14.2.2023) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டு நாளாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை 3வது நாளான இன்றும் நடைபெற்ற நிலையில் தற்போது முடிந்துள்ளது. இது சோதனை அல்ல கணக்கு ஆய்வு என்று தெரிவித்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் இது மறைக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத சொத்து மதிப்புக்களை வெளிக்கொண்டு வரும் வகையில் பிபிசியின் வங்கிக் கணக்குகளைச் சரி பார்த்து வருவதாகக் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

modi bbc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe