ஜார்கண்ட் மாநிலத்தில்ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்), காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின்கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின்தலைவர்ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்துவருகிறார். இந்தநிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுவரும் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாக, மூன்று பேரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரில், இரண்டு பேர் அரசு ஊழியர்கள் என்றும் அவர்களிடமிருந்து அதிகளவிலான பணம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியகியுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள், ஜார்கண்டில் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததைஒப்புக்கொண்டதாகபோலீசார் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், இந்த விவகாரத்திற்குப் பின்னணியில் பாஜக இருப்பதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடர்பாகபொதுச் செயலாளர் சுப்ரியா பட்டாச்சார்யா, "பாஜக, கர்நாடகா, மத்திய பிரதேஷ் மாடலை இங்கும் அமல்படுத்த முயற்சிக்கிறது. ஆனால் அதை செய்ய பாஜகவை நாங்கள்அனுமதிக்க மாட்டோம்" என கூறியுள்ளார்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட நபர்களில்ஒருவரானநிவரன் பிரசாத் மகாடோவின் ஃபேஸ்புக் பக்கத்தில், அவர் பாஜக எம்.பி, உள்ளூர் பாஜக தலைவர்களுடன் இருப்பது போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளது குறித்துவிளக்கமளித்துள்ள ஜார்கண்ட் பாஜகவின் செய்தி தொடர்பாளர், "எனக்கு தெரிந்த வரைநிவரன் பிரசாத் மகாடோபாஜக உறுப்பினர் அல்ல" என கூறியுள்ளார்.
இந்தநிலையில், ஜார்கண்ட்டின் கோலேபிரா தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் நமன் பிக்சல் கொங்காரி, ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகமூன்று பேர் தன்னை பலமுறை அணுகியதாகவும், ஆட்சியைக் கவிழ்க்க தனக்கு ஒரு கோடி ரூபாய் பணமும், அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என அவர்கள் கூறியதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர்கள், இதை தாங்கள் பாஜகவிற்காகசெய்வதாக தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக உங்களை அணுகியவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த நமன் பிக்சல் கொங்காரி, தன்னை அணுகியவர்களின்முகத்தை மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.