PINARAYI VIJAYAN

இந்தியாவில் கரோனாபரவல் மோசமடைந்துள்ளது. கரோனாபரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், மஹாராஷ்ட்ரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. கேரளாவிலும் கரோனாபரவல் அதிகரித்து வருகிறது.

Advertisment

கேரள முதல்வர் தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து, மாநிலத்தில் கரோனாநிலவரம் குறித்து மக்களுக்குத் தெரிவித்து வருகிறார். அதேபோல் இன்றும் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கேரளாவில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டியதேவை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் மக்களுக்கு உதவும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Advertisment

கரோனாபரவல் குறித்துப் பேசிய பினராயி விஜயன், "கேரளா கடுமையான சூழ்நிலையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. கரோனாபரவல் வேகமாகஅதிகரித்து வருகிறது. கரோனாஉறுதியாகும் சதவீதம் குறையவில்லை. இந்தச் சூழ்நிலையால்மாநிலத்தில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தேவை ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கரோனாபெருந்தொற்று காலமென்பதால், வங்கிகள் அனைத்து ஜப்தி நடவடிக்கைகளைநிறுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளபினராயி விஜயன், மின் கட்டண நிலுவைத்தொகைமற்றும் நீர் வரி நிலுவைத் தொகை ஆகியவற்றை வசூலிப்பதை இரண்டு மாதங்களுக்குநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரசமாக மருந்து தேவைப்படுபவர்கள்வெளியே செல்ல முடியாதவர்கள், மருந்துகள் வாங்க கேரள போலீசாரின்உதவியை நடலாம். போலீஸ் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டுமருந்துகளைவாங்க உதவி கோரலாம் எனக் கூறியுள்ளார்.

Advertisment