Advertisment

''திருவள்ளுவர் ஒரு ஆன்மீகவாதி''-ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

Advertisment

திருவள்ளுவர் ஆன்மீகவாதி என்றும், ஜி.யு.போப் மிஷனரி என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம் குறித்து பேசிய பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது. இதற்கு திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கண்டங்கள் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ''திருவள்ளுவர் உள் ஒளி மிக்க ஆன்மீகவாதி. திருக்குறளின் முதல் குறளில் ஆதி பகவன் என எழுதியிருக்கிறார் திருவள்ளுவர். ஆதிபகவன் தான் இந்த உலகைப் படைத்தார் அதைத்தான் திருவள்ளுவர் கூறுகிறார். ஆனால் திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு.போப் திருக்குறளில் உள்ள ஆன்மீக சிந்தனைகளை நீக்கிவிட்டார். மிஷனரியாக இந்தியாவுக்கு வந்த ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல் இருக்கிறது'' என பேசியுள்ளார்.

thiruvalluvar governor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe