ADVERTISEMENT

வாகன ஹாரன்களாக இந்திய இசைக்கருவிகளின் ஒலி கட்டாயம்  - சட்டம் கொண்டுவர மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பரிசீலனை!

01:09 PM Oct 05, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று (04.10.2021) மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் 1,678 கோடி செலவில் 206 கிலோமீட்டர் நீளத்தில் உருவாகவுள்ள 12 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்டு, நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினர். அதனைத்தொடர்ந்து இந்திய இசைக் கருவிகளின் ஒலியை வாகனங்களின் ஹாரன் ஒலியாக ஆக்க சட்டம் கொண்டுவருவது குறித்து ஆலோசித்துவருவதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், "ஹார்மோனியம், தபலா போன்ற இந்திய இசைக்கருவிகளின் ஒலியை வாகனங்களின் ஹாரன் ஒலியாக பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கும் சட்டம் ஒன்றைக் கொண்டுவருவது குறித்து நாங்கள் பரிசீலித்துவருகிறோம்” என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர், ஆம்புலன்ஸ்களிலும், காவல்துறை வாகனங்களிலும் பயன்படுத்தப்படும் சைரனுக்கும் முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நிதின் கட்கரி மேலும் கூறுகையில், "ஒரு கலைஞர் ஆகாஷ்வானிக்கு (அகில இந்திய வானொலி) இசை ஒன்றை அமைத்துள்ளார். அந்த இசை ஒருநாள் அதிகாலையில் இசைக்கப்பட்டது. அந்த இசையை ஆம்புலன்ஸ்களில் பயன்படுத்த விரும்புகிறேன். அதனால் மக்கள் இனிமையாக உணருவார்கள். சைரன்கள் முழு அளவில் ஒலிக்கப்படுவது மிகுந்த எரிச்சலூட்டுகிறது. காதுகளையும் அது பாதிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT