Advertisment

மாட்டிக்கொண்ட தலை; பறிபோன உயிர்; திருட வந்த இடத்தில் நிகழ்ந்த விபரீதம்

A thief's head stuck in a door; Tragedy that he passed away at the place where he came to steal

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கதவில் மாட்டிக்கொண்டு திருடன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் உள்ள சாரநாத் பகுதிக்கு அருகே தனியல்பூர் என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் நசீம் என்ற நபர் தனக்குச் சொந்தமாக விசைத்தறி ஆலை வைத்துள்ளார். ஆலையில் போதிய வேலை இல்லாததால் கடந்த இரு நாட்களாக ஆலை மூடப்பட்டு இருந்தது.

Advertisment

இந்நிலையில், இளைஞர் ஒருவர் ஆலையின் கதவிடுக்கில் தலை மட்டும் சிக்கிய நிலையில் உயிரிழந்திருந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர். விசாரணையில் இறந்த நபர் ஜாவித் என்ற திருடன்என்பது தெரியவந்தது. 30 வயதான ஜாவீத் பல திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.

மேலும் விசைத்தறி ஆலையில் திருடும் நோக்கத்துடன் சென்ற ஜாவீத் கதவு உள்பக்கமாக மேல் தாழ்பாழ் போடப்பட்டிருந்த நிலையில் இதை அறியாமல் தலையை உள்ளே விட்டுள்ளார். கதவின் மேல் தாழ்பாள்போடப்பட்டு இருந்ததால் கதவை அதற்கு மேல் திறக்க முடியாமல் போயுள்ளது. தலை உள் பக்கமாக சிக்கிக் கொண்டதால் வெளியே எடுக்கவும் முடியாமல் இருந்துள்ளது.

எவ்வளவு முயன்றும் சிக்கிய தலையை வெளியில் எடுக்க முடியாமல் இருந்ததால் கழுத்துப்பகுதியில் இறுக்கம் ஏற்பட்டு ஜாவீத் மூச்சுத் திணறி உயிரிழந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. தலை மட்டும் கதவிடுக்கில் சிக்கி விசைத்தறி ஆலைக்குள் இருக்க ஜாவித்தின் உடல் கதவுக்கு வெளியில் இருந்தது.

ஜாவீத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பட்ட நிலையில், மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

thief uttarpradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe