Advertisment

தூங்குடா கைப்புள்ள... வடிவேல் பட பாணியில் போலீசிடம் சிக்கிய திருடன்! 

Thief who was caught by the police in uttar pradesh

திருடச் சென்ற வீட்டில் ஏ.சியை போட்டு திருடன் அசந்து தூங்கிய போலீசிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ, இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் பாண்டே. இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வாரணாசிக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில், நேற்று (02-06-24) சுனில் பாண்டே வீட்டின் முன் கேட் உடைந்திருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர் சுனில் பாண்டேவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக லக்னோவுக்கு வரமுடியாத காரணத்தால், இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisment

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சுனில் பாண்டேவின் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கு திருடன் ஒருவன் தலையணையை வைத்து அசந்து தூங்கியிருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, திருடனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சுனில் பாண்டேவின் வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட திருடன் வீட்டின் முன் கேட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அதிகமாக மது அருந்தியதால் போதையில் அங்கு ஒரு அறைக்கு சென்று ஏ.சியை போட்டு அசந்து தூங்கியுள்ளார் என்பது தெரியவந்தது.

thief theif
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe