கேரள மாநிலம் ஆலப்புழாவில் வீட்டில் திருடிய கொள்ளையன் கொள்ளையடிக்கபட்ட சிலநாள்கழித்து மன்னிப்பு கடித்ததுடன் திருடிய நகைகளை ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் மதுக்குமார் என்பவர் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு கருவாட்டா என்ற இடத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அந்தநேரத்தில் மர்ம நபர்களால் அவரது வீட்டின் பின் கதவுஉடைக்கப்பட்டுபீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டது. விழாவை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய மதுக்குமார் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டுஅதிர்ந்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

Advertisment

LETTER

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இந்த திருட்டு வழக்கு தொடர்பாக அப்பகுதியில் போலீசார் விசாரணையில் இறங்கியிருந்த நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்டமதுக்குமார் வீட்டின் முன்புறம் ஒரு தாளில் சுற்றப்பட்ட நகைகளுடன் ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில் ''எனக்கு பணம் தேவைப்பட்டது தெரியாமல் திருடிவிட்டேன் இனி இப்படி செய்யமாட்டேன் எனவே புகார் வேண்டாம் என்னை மன்னித்துவிடுங்கள்'' என எழுதியிருந்தது. இதனை அடுத்து மதுக்குமார் காவல்நிலைய புகாரை திரும்பபெற்றார். இப்படி திருடியவனே மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதிய சம்பவம் அங்கு சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.