Advertisment

பாகிஸ்தானிடம் இயற்கையாகவே அது இல்லை-ராஜ்நாத் சிங்

rajnath singh

Advertisment

ஜம்முவிலுள்ள சர்வதேச எல்லையில் இருக்கும் முக்கிய பகுதிகளில் லேசர் வேலியை அமைக்கும் பணியை தொடங்கிவைத்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இதனையடுத்து, பாகிஸ்தானில் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இம்ரான் கான் ஆட்சியின் செயல்பாடு குறித்து பத்திரிகையாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ராஜ்நாத் சிங்,“பாகிஸ்தானிடம் இயற்கையாகவே எந்த ஒரு மாற்றமும் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அங்கு மாற்றம் நேரிட வேண்டும் என்று நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இதற்கு முன்னதாக இருந்த அரசைவிட சிறப்பான மாற்றமாக இருக்கும் என நம்புகிறேன்,” என்று இம்ரான் கான் அரசை பற்றி தெரிவித்துள்ளார். மேலும் அதில், அண்டை நாடுகளுடன் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை பாகிஸ்தான் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Rajnath singh
இதையும் படியுங்கள்
Subscribe