மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் ஆக்குவதற்கு எதிராக ராகுல் காந்தி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அரசு நிறுவனங்களை தனியார் வசம் விரைவில் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனால் நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் போராடி வருகின்றன.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வாய்ப்பு கிடைத்தால் தாஜ்மஹால், செங்கோட்டை ஆகிய இரண்டையும் மத்திய அரசு தனியாருக்கு விற்றுவிடுவார்கள் என்று தெரிவித்தார். தனியாருக்கு அரசு நிறுவனங்களை விற்கு விவகாரம் அடுத்த சில நாட்களுக்கு பரபரப்பாக பேசப்படும் ஒரு பொருளாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.
Follow Us