Advertisment

''எல்லா இடங்களிலும் மத வெறுப்புணர்ச்சியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்'' - ராகுல்காந்தி பேச்சு

publive-image

Advertisment

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைக் கடந்து தற்போது டெல்லி வந்தடைந்துள்ளது. டெல்லியில் இருக்கும் ராகுல் காந்தி அங்கிருந்து உத்தரப் பிரதேசம் செல்கிறார். இந்நிலையில் இந்தப் பயணத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளார்.

இந்தப் பேரணியில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தொண்டர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.செங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசுகையில், ''தமிழில் பேச வேண்டும் என்று ராகுல் காந்தி என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது இரண்டு கொள்ளுப் பேரன்கள் சேர்ந்து நடத்தும் யாத்திரை. ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப் பேரன்; நான் காந்தியின் கொள்ளுப் பேரன். மாற்று கொள்கையில் இருந்தாலும் தேச ஒற்றுமைக்காக யாத்திரையில் பங்கேற்றுள்ளேன். எந்த ஒரு நெருக்கடி நமது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு வந்தாலும் நான் தெருவில் வந்து நிற்பேன். எந்தக் கட்சி ஆள்கிறது என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் அதற்காகவே இங்கு வந்திருக்கிறேன்'' என்றார்.

nn

Advertisment

தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, ''யாத்திரைக்குத் தேவையான சக்தியை மக்களாகிய நீங்கள் எனக்குக் கொடுத்துள்ளீர்கள். இந்த யாத்திரையைத்தொடங்கியபோது நாட்டில் நிலவும் வெறுப்புணர்ச்சியை நீக்க நினைத்தேன். கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் நிறைந்ததுதான் இந்தியா. சிலர் எல்லா இடங்களிலும் மத வெறுப்புணர்ச்சியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். வெறுப்புணர்ச்சி மக்களிடம் ஏன் பரப்பப்படுகிறது?'' எனப் பேசினார்.

congress kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe