Advertisment

''இவர்கள் நாகரீகமற்றவர்கள்...''-வார்த்தையை திரும்பப் பெற்ற தர்மேந்திர பிரதான் 

 'These people are indecent...''- Dharmendra Pradhan takes back his words

இன்று (10/03/2025) நாடாளுமன்றத்தில் மொழிக் கொள்கை தொடர்பாக பரபரப்பான காரசார விவாதம் நடைபெற்றது. 'மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது; புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் தமிழகத்தை மத்திய அரசு பழிவாங்குகிறது' என திமுக எம்பி தமிழச்சி தங்க பாண்டியன் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Advertisment

இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மாணவர்களை திமுக தவறாக வழிநடத்துகிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ-டர்ன் போட்டது. மொழியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இவர்கள் ஜனநாயகம் அற்றவர்கள், அநாகரீகமானவர்கள் (un democratic, uncivilized) என இருமுறை குறிப்பிட்டார். மேலும், ''சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பதை கனிமொழிதான் கூறவேண்டும். பாஜக ஆளாத மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.

Advertisment

 'These people are indecent...''- Dharmendra Pradhan takes back his words

மத்திய கல்வி அமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் மக்களவையில் 'தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வேண்டும்' என முழக்கமிட்டனர். இதனால் சிறிது நேரம் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதிலளித்து திமுக எம்பி கனிமொழி பேசுகையில், ''உங்கள் பேச்சு எனக்கு வலியையும் காயத்தையும் தந்துள்ளது. தமிழர்கள் அநாகரிகமானவர்கள், நாகரீகமற்றவர்கள் என்ற வார்த்தையை திரும்பப் பெற வேண்டும். மும்மொழி கொள்கையை ஏற்பதாக திமுக எம்பிக்கள் ஒருபோதும் கூறியது இல்லை. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசும்,எம்பிக்களும்ஒருபோது ஏற்றதில்லை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என முதல்வர் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டார்'' என எம்பி கனிமொழி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய தர்மேந்திர பிரதான் கடும் கண்டனம் எழுந்ததை அடுத்து, 'காயப்படுத்தி இருந்தால் அநாகரிகமானவர்கள் என்ற வார்த்தையை திரும்பப் பெறுவதாக' தெரிவித்தார்.

kanimozhi Language Parliament
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe