/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/s_8.jpg)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23 ஆம் தேதி, தேசிய பணமாக்கல் (national monetization pipeline) திட்டத்தைமுறைப்படி ஆரம்பித்துவைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் குறைவாகப் பயன்படுத்தப்படும் அரசு சொத்துகள், குத்தகைக்கு விடப்படவுள்ளன. இதில் தேசிய நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் போன்றவற்றைக் குத்தகைக்கு விடுவதும் அடங்கும்.
இவ்வாறு அரசு சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவதன்மூலம் திரட்டப்படும் 6 லட்சம் கோடியை, உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேநிறத்தில்இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிப்புதெரிவித்துள்ளன.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "நாட்டின் அனைத்து சொத்துக்களையும் பாஜகவிற்றுவிட்டது. அரசுக்கு சாதகமான தொழிலதிபர்களுக்கு நாட்டின் சொத்துக்களை பரிசாக அளிக்கிறார் பிரதமர்" என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்தநிலையில்மம்தா பானர்ஜியும் இந்த திட்டத்தை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக மம்தா, "அந்த சொத்துக்கள் மோடியுடையதோபாஜகவினுடையதோ அல்ல. அந்த சொத்துக்கள் நாட்டினுடையது. நாட்டின் சொத்துக்களை பிரதமரால் விற்கமுடியாது. இது துரதிருஷ்டவசமான முடிவு. இந்த முடிவினால் அதிர்ச்சியடைந்தேன்" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)