Advertisment

“மத்திய அரசின் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இருக்காது” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

There will be no major announcements in the Union Budget Union Minister Nirmala Sitharaman

Advertisment

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 22 ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் இந்த கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதே சமயம் டெல்லியில் சிஐஐ சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “2024 ஆம் ஆண்டின் மத்திய அரசின் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் இருக்காது. 2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் மரபுப்படி இடைக்கால பட்ஜெட்டாகவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். எனவே வரும் பிப்ரவரியில் பட்ஜெட், செலவு மானியக் கோரிக்கையாகவே தாக்கல் செய்யப்படும். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் வேறு எந்தவித புதிய அறிவிப்பும் வெளியாகாது” எனத் தெரிவித்துள்ளார்.

budget Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe