ADVERTISEMENT

''இதில் மெத்தனம் கூடாது...''-யஷ்வந்த் சின்ஹா பேட்டி

04:28 PM Jun 27, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஷிப்டிலும் 8 முதல் 10 வீரர்களைக் கொண்ட கமாண்டோக்கள் யஷ்வந்த் சின்ஹாவின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படுவது குறித்து இன்று டெல்லியில் யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே ஆளுங்கட்சி தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிக்கு என்னைப் போட்டியிட பணித்ததற்கு நன்றி.இந்த முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பைக் கையாளுவதில் மெத்தனம் கூடாது'' எனத் தெரிவித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT