chandrababu naidu

அரசியல் ரீதியாக பழிவாங்க முடியாத காரணத்தால் திருப்பதி கோவில் விவகாரத்தில் சிலர்என்னை பழிவாங்க துடிக்கிறார்கள் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

நேற்றுவிஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர்அந்த நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போதுகூறுகையில்,

என்னை அரசியல் ரீதியாக பழிவாங்க முடியாத சிலர் தன்மீது இருக்கும் பயத்தில்திருப்பதி கோவில் மூலம் பழிதீர்க்க வீண்பழி சுமத்தி வருகின்றனர். 2003-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரமோற்சவதத்தின் போது அரசு சார்பில் பட்டு வஸ்திரம் கொண்டு சென்ற போது என்னை திட்டமிட்டுகொல்லமுயன்றனர். ஆனாலும் அந்த ஏழுமலையான் என்னை காப்பாற்றினார்.

Advertisment

ஆனால் தற்போது பதிவேட்டில் இல்லாத வைரம் மற்றும் நகைகள் குறித்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே நீதிபதிகள் விசாரணை நடந்து வருகிறது.

வருங்காலங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது திருப்பதி கோவிலின் நகைகள் மற்றும் கணக்குகள் பற்றிய ஆய்வுகள் நீதிபதிகள் மூலம் நடத்தப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்படும் இவ்வாறு அவர்கூறினார்.