Advertisment

இனி சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றத்திற்கு தூக்கு;முன்ஜாமீன் கிடையாது! நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

child rape

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினால்தூக்குத்தண்டனைக்கு வழிசெய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

காஷ்மீரில் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை மற்றும் உத்திரபிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 16 வயது சிறுமி கும்பலால் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் என இந்த இரு சம்பவங்களும் மக்கள் மனதில் பெரும் கண்டனத்தையும் இதுபோன்ற சிறார் கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற செய்தது.

இந்நிலையில் தொடர்ந்து வரும் சிறார் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளில் தற்போது புதிய சட்ட மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த புது சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியதாவது,

12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் 20 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சமாக தூக்கு தண்டனை.

16 வயதிற்கு உப்பட்ட சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்தால் சிறைத்தண்டனை 10 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் குற்றத்தின் அடிப்படையில் சாகும்வரை சிறைத்தண்டனையும் விதிப்பப்படும்.

12 லிருந்து 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் சாகும்வரை சிறை.

பெண்களைபாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கினால் சிறை 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் 12 முதல் 16 வயதுசிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் கூட்டுப்பாலியால் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டால் குற்றம் சுமத்தப்பட்டவர்க்கு குற்றச்சாட்டின் கீழ் முன்ஜாமீன் வழங்கப்படாது போன்றவை அந்த மசோதாவின் முக்கிய அம்சங்களாக இருந்தது.

Child abuse Parliament Sexual Abuse
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe