Advertisment

" கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை" - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பேட்டி!

Advertisment

புதுச்சேரியில் உள்ள அரசு ஆரம்பச்சுகாதார நிலையங்களை சி.சி.டி.வி மூலம் கண்காணிக்கும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரங்கசாமி," முதல் கட்டமாக புதுச்சேரியில் உள்ள 27 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சி.சி.டி.வி மூலம் கண்காணிக்கப்படுகிறது. தொடர்ந்து காரைக்காலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சி.சி.டி.வி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாளை பிற்பகல் முதல் புதுச்சேரி பழைய துறைமுக பகுதியில் மூன்று நாட்களுக்கு சுகாதார திருவிழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்க உள்ளனர். அதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தற்போது புதுச்சேரியில் கரோனா ஜீரோ என்ற நிலையில் உள்ளது. கரோனாவை எதிர்கொள்ள அரசு முழு வீச்சில் தயாராக உள்ளது" என்றார்.

தொடர்ந்து," மத்திய உள்துறை அமைச்சரிடம் என்ன கோரிக்கை வைத்தீர்கள்?" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, " புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை புதுச்சேரிக்கு வந்த அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன். மாநில வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்" என கூறினார். மேலும் ' தேசிய ஜனநாயக கூட்டணி' குறித்த கேள்விக்கு, " மத்திய அரசின் உதவியுடன் அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். பிரதமர் அறிவித்த மாதிரி புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும். புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை" எனவும் தெரிவித்தார்.

rangasamy Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe