ADVERTISEMENT

''இலவசத் திட்டங்கள் குறித்து வரைமுறை தேவை''- உச்சநீதிமன்றம் கருத்து! 

12:32 PM Aug 17, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேர்தலின் போது, இலவசங்களை அறிவிக்கக் கட்சிகளுக்கு தடைகோரி பா.ஜ.க.வின் அஸ்வினி உபாத்யாய் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக இணைக்கக்கோரி தி.மு.க. சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "பல்வேறு தரப்பு மக்களைக் கொண்ட நாட்டில் ஒவ்வொரு பகுதிக்குமான தேவை வெவ்வேறாக உள்ளது. ஒரே திட்டம் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில், அரசியல் கட்சியினர் வாக்குறுதிகளை கொடுப்பதை நாங்கள் தடுக்க முடியாது. இலவசத் திட்டங்கள் என்றால் என்ன என்பது குறித்து வரைமுறை தேவை. இலவச கல்வி, இலவச மின்சாரம் ஆகியவை வழங்குவதைக் கூட இலவச அறிவிப்புகளாக கருத வேண்டுமா? என நீபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் குடிமக்கள் கண்ணியமாக வாழ்வதை 100 நாள் வேலைத் திட்டம் போன்ற திட்டங்கள் உறுதி செய்கின்றன என கருத்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT