Advertisment

அய்யோ மாட்டிக்கிச்சே...- கோவிலில் சிலையின் கால்களுக்கு இடையே சிக்கிக் கொண்ட நபரால் பரபரப்பு

There is a commotion in the temple due to the person who got stuck between the legs of the elephant statue

கோவில்களுக்குச் செல்லும் பக்தர்கள் விதவிதமான முறையில் நேர்த்திக்கடன்களைச் செய்வது வழக்கம். அதேபோல் எண்ணற்ற பரிகார பூஜைகளும் உள்ளன. சிறியயானை சிலையின் கால்களுக்குள் சிக்கிக் கொண்ட நபர் வெளிவர முடியாமல் தவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

குஜராத்தில் உள்ள கோவில் ஒன்றில் இளைஞர் ஒருவர் பரிகாரம் செய்வதற்காக யானை சிலையின் கால்களுக்குள் நுழைந்துள்ளார். எதிர்பாராத விதமாக அவர் அங்கேயேமாட்டிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அவரது சரிபாதிஉடல் யானை சிலையின் மறுபக்கத்திலும் மற்றொரு பாதி உடல்யானை சிலையின் மறுபக்கமும் உள்ளது.

Advertisment

முதலில் சிலையின் இடையே எளிதாக நுழைந்த நபர் இடுப்பளவு பகுதி சிலையின் அந்தப்பக்கம் சென்றதும் அவரால் வெளியேற முடியவில்லை. சத்தம் கொடுத்த அவரை, கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த நபர்கள் சிக்கிக் கொண்டவருக்கு அறிவுரைசொல்லியபடிஅவரை மீட்கப் போராடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிலையில் கால்களுக்கு இடையே சிக்கிக் கொண்ட நபர் சிலையினை சேதப்படுத்தாமல் அவருக்கும் காயங்கள் இல்லாமல் மீட்கப்பட்டாரா எனத் தெரியவில்லை. இணையத்தில் வேகமாய் பரவும் இந்த வீடியோவிற்கு மக்கள் தங்கள் கருத்துகளைத்தெரிவித்து வருகின்றனர். அதில் அளவுக்கு அதிகமான பக்தியும் கூட உடல்நலத்திற்குப் பாதிப்பினை ஏற்படுத்தும் போன்ற கருத்துகளும் இருந்தன.

Gujarat temple
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe