Published on 22/08/2022 | Edited on 22/08/2022

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை எனப்படும் UPI சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் எவ்வித பரிசீலனையும் இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயனர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு UPI பரிவர்த்தனைக்கும் கட்டணத்தை வசூலிப்பது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், UPI சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதனிடையே, மானியங்களாக வழங்கப்படும் இலவசங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கூடியவை என ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழு உறுப்பினர் ஆஷிமா கோயல் தெரிவித்துள்ளார். இலவசங்கள் ஒருபோதும் இலவசமாகக் கிடைப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.