publive-image

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க மற்றும் பா.ஜ.க. ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் மக்கள் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும், முதலமைச்சர் ரங்கசாமியை மாற்ற வேண்டுமெனவும் பா.ஜ.க. ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதற்கு என்.ஆர்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களிடையே இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

Advertisment

publive-image

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சட்டபேரவை வளாகத்தில் சபாநாயகர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க, ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், "சில அதிகாரிகள் சரியாக செயல்படாததன் காரணமாக பல்வேறு தொகுதிகளின் மக்கள் பணிகள் நடைபெறவில்லை. சரியாக செயல்படாத அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. இனி வரும் காலங்களில் கூட்டணிக் கட்சியினரை விமர்சிக்காமல், சட்டமன்ற கட்சித் தலைவர் மூலமாக பிரச்சனைகளைத் தெரிவிக்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர்களிடம் அறிவுறுத்தி உள்ளோம்" என கூறினார்.

Advertisment