Advertisment

மக்களவைத் தேர்தல்; கடந்தாண்டை விட அதிகரித்த வாக்காளர்கள்!

There are 96 crore people who are eligible to vote in the Lok Sabha elections

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜகவும், இழந்த ஆட்சியை எப்படியாவது கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.

Advertisment

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான வேலைகளில்தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்களவைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் 96 கோடிக்கு மேற்பட்ட வாக்காளர்கள் இந்தத்தேர்தலில் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர் என்று தலைமைத்தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisment

மொத்த வாக்காளர்களில்முதல் தலைமுறை வாக்காளர்களான 18 வயது முதல் 19 வரை உள்ளவர்கள் 1.73 கோடிபேர் மக்களவைத்தேர்தலில் வாக்களிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 96 கோடி பேரில் 47 கோடி பேர் பெண் வாக்காளர்கள் உள்ளனர். கடந்தமக்களவைத்தேர்தலின் போது இந்தியாவின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 91.20 கோடியாக இருந்த நிலையில், இந்தத்தேர்தலில் 96 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

voters
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe