Advertisment

அரசு பள்ளியில் ஆச்சர்யமூட்டும் யோகா தினக்கொண்டாட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று கடந்த 2015 -ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் யோகா தினம் ஆண்டுதோறும் ஜீன் 21 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டிநேற்று 21.06.19 (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதிலும், நாட்டின் பல்வேறு இடங்களிலும் யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 5-வது ஆண்டான நேற்று இதய நலனுக்கான யோகாசனம் என்ற கருத்தாக்கத்தை மையமாக கொண்டு யோகா தினம் கொண்டாடப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலதலைநகர் ராஞ்சியில் 40 ஆயிரம் மக்களுடன் அமர்ந்து பிரதமர் நரேந்திர மோடி யோகா செய்தார். தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகின்றது.

Advertisment

INTERNATIONAL YOGA DAY JUNE 21

ஆனால் மாணவர்களின் நலன்கள் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை பேணிப்பாதுகாக்கும் வகையில் தேனி மாவட்டம் சில்வார்பட்டி அரசுப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு மிகச்சிறப்பாக யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.மோகன் அவர்கள் கூறுகையில் "எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில். பல்வேறு இயற்கை சார்ந்த மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பல திட்டங்களை மாணவர்களுக்கு செயல்படுத்தி வருகின்றோம். அதில் விதைப்பந்து, அடர்ந்தக்காடு, சாலையோர மரம் வளர்த்தல், மற்றும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தும் இயற்கை சார்ந்த திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

Advertisment

INTERNATIONAL YOGA DAY JUNE 21

அதைத்தொடர்ந்து தங்கள் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மரங்களும், நடப்பாண்டு பள்ளியில் புதிதாகச்சேரும் மாணவர்களுக்கு, "ஒரு நபர், ஒரு மரக்கன்று வீதம்" ஆண்டிற்கு 200- க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. நேற்று யோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில் இந்தாண்டு சேர்ந்த LKG மற்றும் UKG மாணவர்களுக்கு 130 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. மரக்கன்று வாங்குவதற்கான செலவுகள் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பாகவும் வழங்கப்படுகின்றது. மரக்கன்று வழங்கப்பட்ட நாள் முதல் வாரம் அல்லது மாதம் ஒரு முறை நேரில் சென்று பார்வையிடுகின்றோம். இறுதியில் சிறப்பாக செயல்புரிந்த மாணவருக்கு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்து வருகின்றோம்",என்கின்றார். தங்கள் பள்ளியை போன்று அனைத்து பள்ளி ஆசிரியர்களும் இது போன்ற செயல்பாடுகளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர் மோகன் வேண்டுகோள் விடுத்தார்.

-பா.விக்னேஷ்பெருமாள்

India INTERNATIONAL YOGA DAYS JUNE 21 Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe